மயிலைபாலு
‘வ' 'குவார்ட்டர் கட்டிங்’ என்ற திரைப்படத் தின் பெயர் தமிழில் உள்ளது. இதற்கு வரி விலக்கு அளிக்க தமிழக அரசு முன் வந்துள்ளது.
ஆங்கில வார்த் தைகளும் உள்ளனவே எப்படி தமிழா கும் என்று சிலர் கேட்கலாம். ‘வ’ தான் படத்தின் பெயர். அதற்குக் கீழே உள்ள ஆங்கில சொற்கள் தமிழ் புரியாதவர் களுக்காக தரப்பட்டுள்ள விளக்கம். எப்படியென்றால், எந்திரன் படத்திற் குக் கீழே ‘THE ROBOT’ என்று இருக்கிறதே அப்படி.
தமிழகத்தில் பெரும்பாலான மக்க ளுக்கு ஆங்கிலம் விளங்குகிறது. தமிழ் தான் விளங்குவதில்லை. குவார்ட்டர், கட்டிங் என்றால் சின்னப் பையனுக் குக் கூட கப்பென்று புரிந்துவிடும் (வாழ்க டாஸ்மாக்!) ஆனால் ‘வ’ என்றால் புரியுமா? அகராதியில்தான் அதற்கு அர்த்தம் இருக்கிறது. ‘வ’ என்றால் குவார்ட்டர். புரியாதவர் களுக்கு விளக்க வேண்டும் என்றால் தமிழ் எண்களின் குறியீடுகளை எடுத் துரைக்க வேண்டும். ‘க’ என்றால் ஒன்று. ‘ரு’ என்றால் ஐந்து. ‘அ’ என் றால் எட்டு.
இதை வைத்து பண்டைக்கால புலவர் ஒருவர் சொல் விளையாட்டு நடத்தி அங்கதச் செய்யுள் எழுதி யுள்ளார்.
“எட்டேகால் லட்சணமே
எமனேறும் வாகனமே
முட்டக் கூரையில்லாச் சுவரே”
என்று அந்தச் செய்யுள் சொல்லும். நேரடியாக எருமை என்று திட்டாமல் எமனேறும் வாகனமே எனலாம். ‘குட்டிச்சுவர்’ என்பதற்கு பதிலாக ‘முட்டக் கூரையில்லாச் சுவர்’ என லாம். இப்படித்தான் எட்டேகால் லட்ச ணம் என்றால் அவ லட்சணம். (அ-எட்டு; வ-கால்).
தமிழின் இந்த உள் ரகசியத்தைப் புரிந்து செம்மொழியை நன்கு ஆய்வு செய்து ‘வ’ என்றால் கால் (நான்கில் ஒரு பங்கு) என்பதைக் கண்டறிந்து சொன் னதற்காகவே அந்தப் படத்திற்கு வரிவிலக்கு கொடுத்திருக்கலாம். அக ராதியிலும் ‘வ’ என்பதற்கு விளக்கம் கிடைத்திருக்கும்.
ஆனால் ‘ஒச்சாயி’ என்பதை எந்த அகராதியில் தேடுவது? தமிழ் எங்கள் உயிர் என்று பேசிக்கொண்டே அதனை வதை செய்து ஆங்கிலத்துக்கு அடிமை யாக்கிவிட்டனர். அதனால்தானே தமி ழில் பெயர் சூட்டும் திரைப்படங் களுக்கு வரிவிலக்கு; தமிழில் பெயர் வைத்தால் குழந்தைகளுக்கு மோதிரம் (கலைஞர் மொழியில் கணையாழி) கடைகளின் பெயர்ப்பலகையைத் தமி ழில் எழுதி வைக்க ஏகப்பட்ட கெடு பிடி என்ற கூத்தெல்லாம் அரங்கேறு கிறது.
‘ஒச்சாயி’ பெயரைத் தமிழ் அகராதி யில் தேடிய அரசு நிர்வாகத்திற்கு சில கேள்விகளை முன் வைக்க வேண்டி யுள்ளது. அதற்கு முன் ‘ஆக்ஸ்ஃ போர்ட்’ அகராதியின் சில அம்சங் களை சொல்லி வைப்பது நன்று.
நடக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி முன் கூட்டியே நடத்தப்பட்டால் ப்ரி போன் (pre-pond) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் இப்படியொரு வழக்கு இல்லை. அட் வான்ஸ் (advance) ஆகியது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் வழக்கத்தில் வந்துவிட்ட சொல்லை யும் விடாமல் இது இந்திய வழக்கு, 1970களிலிருந்து இந்தச் சொல் பயன் படுத்தப்படுகிறது என்ற குறிப்போடு ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி பதிவு செய் துள்ளது.
இப்படி தமிழ் அகராதியைத் தற் காலிகப்படுத்தியிருக்கிறதா தமிழக அரசு? தமிழ் என்பது செந்தமிழ் மட்டு மல்ல; கொடுந்தமிழும் மக்கள் வழக் கில் உள்ள கிராமியத் தமிழும் வட்டாரத் தமிழும் சேர்ந்ததுதான் தமிழ். இவற்றுக் கெல்லாம் அகராதி தயாரிக்க வேண் டும் என்ற தமுஎகசவின் கோரிக்கைக்கு செவிசாய்க்கிறதா தமிழக அரசு?
தமிழை காலத்துக்கேற்ப, மக்க ளின் உணர்வுகளுக்கேற்ப, பழக்க வழக்கங்களுக்கேற்ப, தொன்மங்களை யும் உள்ளடக்கி தகவமைக்காமல் ‘ஒச்சாயி’ என்ற கிராம தேவதையின் பெயரை அகராதியில் தேடுவது அபத் தம் அல்லவா?
நாடகப் பேராசிரியர் மு. ராமசாமி எழுதி இயக்கிய ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ என்ற நாடகத்தை அரங்கில் நடத்த தமுஎகச காவல்துறையிடம் அனுமதி கோரியது. கலகம் என்பது கெட்ட வார்த்தை அதை நீக்கினால் தான் அனுமதி என்று வாதாடினார் காவல்துறை ‘அதிகாரி’. இது நல்ல வார்த்தைதான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களைக் காட்டி வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் விளக்கிய பிறகே ஏற்றுக்கொண்டார் அவர்.
இப்படி தமிழகத்தின், தமிழர்களின் அகராதி தெரியாமல் அகராதியின் பக் கங்களை அதிகாரிகள் புரட்டிக்கொண் டிருந்தால் “என்னப்பா சுத்த அகராதி புடிச்சவங்களா இருக்காங்கே” என்று கேலி பேசும் நிலைதான் தமிழக அர சுக்கும், தமிழகத்தின் தமிழாய்ந்த முதல்வருக்கும் ஏற்படும் என்பது தான் ‘ஒச்சாயி’ படம் தரும் பாடம். (எப்படியோ ‘ஒச்சாயி’ தமிழ்பெயர்தான் எனக் கண்டுபிடித்து வரி விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்பது கடைசி யாகக் கிடைத்த ஆறுதல் தகவல் )


2 பேச்சுக்கள்:
நல்லா தான் சொல்றீங்க, ஆனாலும் ஒரு சந்தேகம்
'வ' னா குவார்ட்டர் சரி, கட்டிங்கை எப்படி தமிழில் சொல்வதுனு சொல்லலியே
இனிமே தமிழ் படமெல்லாம் இரண்டு பேரோட வரும் மேலே அரசுக்காக, வரி விலக்கு வாங்க வ, சிவாஜி, எந்திரன் மாதிரி
கீழே மக்களுக்காக குவார்ட்டர் கட்டிங், த பாஸ், ரொபோ மாதிரி
வாழ்க தமிழ்!
Post a Comment