”சென்னை ஆவடியில் 167 ஏக்கர் நிலத்தை ஆளுங் கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சம்பந்தப் பட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிலமோசடி விவகாரங் களில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
![]() |
| சென்னையில் ஆவடி அருகே உள்ள மோரை என்ற கிராமத்தில் 167 ஏக்கர் நிலத்தை ஆயிரக்கணக் கான ஏழை, எளிய மக்கள் வாங்கி வரைபட அனுமதி பெற்று, பட்டா பெற்றுள்ள னர். அந்த இடத்தினை ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் திருமலைநகர் என பெயரிட்டு நில மோசடி செய்துள்ளனர் |
மதுரையில் திங்களன்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
சிமெண்ட் விலையேற்றம்...
தமிழகத்தில் சிமெண்ட் விலை 145 ரூபாயிலிருந்து 290 ரூபாயாக உயர்ந் துள்ளதால் கட்டுமானப் பணி பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. இத்தொழி லில் ஈடுபட்டுள்ள ஏராள மானோர் பாதிக்கப்பட்டுள் ளனர். சிமெண்ட் உள் ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலை உயர் வால் அரசுப்பணிகள் மட்டுமின்றி தனியார் கட்டு மானத் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. சிமெண்ட் விலை ஏற்றத்தால் கட்டு மானப்பொருட்கள் அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆகவே, தமிழக அரசு இந்த விலை உயர்வை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுகவினர் நிலமோசடி:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நில மோசடி விவகாரங்களில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறன. ஆனால், இப்பிரச்சனையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் ஆவடி அருகே உள்ள மோரை என்ற கிராமத்தில் 167 ஏக்கர் நிலத்தை ஆயிரக்கணக் கான ஏழை, எளிய மக்கள் வாங்கி வரைபட அனுமதி பெற்று, பட்டா பெற்றுள்ள னர். அந்த இடத்தினை ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் திருமலைநகர் என பெயரிட்டு நில மோசடி செய்துள்ளனர்.
அந்த இடத்தில் வரு வாய்த்துறை விசாரணை முடியும் வரை எந்த பத் திரப் பதிவும் நடக்கக்கூடாது என பத்திரப்பதிவுத்துறை தலை வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதனையும் மீறி ஆளுங்கட்சியின் அரசியல் செல்வாக்கோடு சமூக விரோதக்கும்பல் நில மோசடி விவகாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறது. ஆகவே, இந்நில மோசடி தொடர்பாக விசாரணை முடியும் வரை அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெறவோ, சமூகவிரோதிகள் கூடவோ விடாமல் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அத்து டன் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

ஆ.ராசாவை பதவி நீக்குக!
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த நிலையில், 1.4 லட்சம் கோடி ரூபாய் இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைக்குழு கூறியுள்ளது. தணிக்கைக்குழுவின் அறிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆ.ராசாவை, பிரதமர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

0 பேச்சுக்கள்:
Post a Comment